அல்லாஹ் எப்பொழுதும் பார்க்கின்றான்

 



அமீன் என்கின்ற ஏழு வயசு பையனுடைய வாழ்க்கையில நடக்கிற விஷயங்களையும் அது அவன் இஸ்லாம் காட்டிய வழியிலே எப்படி பின்பற்றி நடக்கிறான் என்பதை பற்றியும் தான் நம்ம இந்த தொடர்ல பார்க்க போறோம். அவன் செய்யிற சின்ன தப்பு தவறுகளை அவன் எப்படி திருத்திக்கிறான்னு பார்க்கும்போது நம்மளும் நம்முடைய தவறுகளை சரி செய்ய இந்த கதைகள் பயனுள்ளதாய் இருக்கும்.


 வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.  அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா. வ அலைக்கும் ஸலாம் அமீர். அம்மா, நான் மதரசாவிற்கு கிளம்புறேன், போயிட்டு வரேன். 

அல்ஹம்துலில்லாஹ். சரிப்பா, பார்த்து போயிட்டு வா. அமீன் ஒரு விஷயத்தை மறந்துராதே. உம்மா உனக்கு எப்பவும் சொல்றதுதான், அல்லாஹ் நம்மள எப்பவுமே பார்த்துட்டு இருக்கான். அவனுக்கு பயந்து நம்ம உண்மையா நடந்துக்கணும். அம்மா நீங்க சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. இன்ஷா அல்லாஹ் நான் எப்பவுமே நீங்க சொன்னதை மறக்க மாட்டேன். சலாம் அலைக்கும் உம்மா, நான் போயிட்டு வரேன். வா அலைக்கும் ஸலாம். பார்த்து போயிட்டு வாப்பா.


அது அது வந்து என்ன ஆச்சு? மதரசாவுக்கும் அப்புறம் போய்க்கலாம். வா விளையாடலாம்! எனக்கும் விளையாட ஆசையா தான் இருக்கு. ஆனா அம்மா மதராசாவுக்கு போக சொன்னாங்களே? இப்போ என்ன பண்றது? அம்மா கிட்ட மதராசாவுக்கு போனேன்னு பொய் சொல்லிடலாம். 

அம்மா பார்த்துக்கிட்ட இருக்காங்க. நம்ம பொய் சொன்னா அவங்களுக்கு தெரியவா போகுது? அல்லா நம்மள எப்பவுமே பார்த்துட்டு இருக்கா? அவனுக்கு பயந்து நம்ம உண்மையா நடந்துக்கணும். வேணாம். நம்ம மதராசாவுக்கே போவோம். அம்மா கிட்ட சொல்லிட்டு அப்புறமா விளையாடுவோம். அம்மாக்கு தெரியாம இருக்கலாம் ஆனா அல்லாஹ் நம்மள பார்த்துட்டு இருக்கான்ல. இல்லடா ரஹீம் நீ போய் விளையாடு மதரசா முடிச்சிட்டு அம்மா கிட்ட சொல்லிட்டு வா. சரிடா. அவனைத் தவிர்த்துகிட்டான். இப்போ மனசுல எந்தவித சுமையும் இல்லாம சந்தோஷமா மதரசாவிற்கு கிளம்பிட்டான். வழியில் ஒரு பழக்கடையை பார்க்கிறான். ஐயா ஆப்பிள் பார்க்கவே நல்லா பிரெஷ்ஷா இருக்கு. அச்சச்சோ இன்னைக்குன்னு பார்த்தா அம்மா காசு கொடுத்து விடலையே. இப்போ என்ன பண்றது? ஆப்பிள் சாப்பிட ஆசையா இருக்கு. ஹ்ம். காசு இல்லனா என்ன? யாருமே தான் தெருவிலயோ கடையிலயோ இல்லையே? பழத்தை எடுத்துரு யாருமே உன்ன பார்க்கல. பழத்தை சீக்கிரம் எடு. அதா, இங்கே யாருமே இல்லையே. நம்ம ஒரு ஆப்பிள் எடுத்தா யாருக்கும் தெரியவா போகுது? அல்லா நம்மள எப்போதுமே பார்த்துட்டு இருக்கான். அவனுக்கு பயந்து நம்ம உண்மையா நடந்துக்கணும். யா அல்லாஹ், எவ்வளவு பெரிய தப்பு பண்ண பார்த்தேன். ஒரு நிமிஷத்துல ஷைத்தான் என்ன வழி கெடுக்க பார்த்துட்டான். ஏய், தம்பி, இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? கடையில யாரும் இல்லன்ன உடனே பழத்தை திருட வந்துட்டியா? யாரும் இல்லாத நேரத்துல ஏதாவது படத்தை எடுத்தியா? யாரும் இல்லைன்னா என்ன? அல்லா எப்பவும் இருக்கான், நம்மள பார்த்துக்கிட்டு இருக்கான். நான் அந்த மாதிரி எல்லாம் எதுவுமே எடுக்கல, அங்கிள். மாஷா அல்லாஹ். இந்த சின்ன வயசுல உனக்கு அல்லா ரொம்ப பெரிய ஹிதாயத்தை கொடுத்திருக்கான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பழத்தை பரிசா வச்சுக்கோ. ஜஸாக்கல்லாஹ் அங்கிள். இது அந்த பழைய வியாபாரி கொடுத்த பரிசு இல்ல, அல்லாஹ் கொடுத்த பரிசு அமீன், என்னது? கையில ஏதோ மறைச்சு கொண்டு வந்திருக்க? உம்மா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு பரிசு கிடைச்சிருக்கு. பரிசா? என்ன பரிசு? எனக்கு என்ன? பிடிச்சிருக்கு தெரியுமா? ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆப்பிள். அடடா, அம்மா கிட்ட வா. இது உனக்கு யார் கொடுத்தா? உங்க உஸ்தாத் கொடுத்தாங்களா? இல்லம்மா, பழக்கடைக்காரர் அங்கிள் எனக்கு இதை பரிசா கொடுத்தார். அப்ப. அரியா, அவரை பரிசு கொடுக்கிற அளவுக்கு நீ என்ன பண்ண? அம்மா. இன்னைக்கு நான் ரெண்டு தப்பு பண்ண பார்த்தேன். என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் விளையாட கூப்பிட்டாங்க. நானும் உங்களுக்கு தெரியாம விளையாடலாம்னு நினைச்சேன். ஆனா அல்லாஹ் நம்மள பாத்துக்கிட்டே இருப்பான்னு நீங்க சொன்னது ஞாபகத்துல வந்து, அதனால விளையாடாம வந்துட்டேன். அப்புறம் பழக்கடையில் இருந்த பழத்தை பார்க்கும்போது எனக்கு சாப்பிட ஆசையா இருந்தது. என்கிட்ட பணம் இல்லை. அதை எடுக்கலாம்னு நினைச்சு, மனசு சொல்லுச்சு. ஆனா அல்லாஹ் பாக்குறான்னு நான் அதையும் செய்யல. இதை தெரிஞ்சுக்கிட்ட பழக்கடைக்காரர் எனக்கு அந்த ஆப்பிள் பழத்தை பரிசா கொடுத்தாருமா. அல்ஹம்துல்லாஹ். உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. 


இதிலிருந்து பிள்ளைகள் கற்கவேண்டிய பாடம் . அல்லாஹ் எப்பொழுதும் பார்க்கின்றான் . அவன் பார்வையிலிருந்து எந்த ஒரு ஜீவராசியும் தப்பமுடியாது.

இது சிறுவர்களுக்கு மட்டும் பாடம் அல்ல மாறாக பெரியவர்களாகிய நமக்கும் தான்.


கருத்துகள்